காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும்...உறுதி செய்ய சொன்ன முதலமைச்சர்!

காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும்...உறுதி செய்ய சொன்ன முதலமைச்சர்!

காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்படுவதை ஒவ்வொரு காவல் நிலைய தலைவரும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆலோசனை :

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

களப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் :

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறை மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும் என அறிவுறுத்தினார். மக்களின் நண்பனாக காவல்துறை செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இதற்கான களப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.

இதையும் படிக்க : திமுக வெளியிட்ட புள்ளி விவரம் தவறானது...கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!

காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும் :

மேலும், காவல் நிலையம் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்படுவதை, ஒவ்வொரு காவல் நிலைய தலைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதேபோல், குற்றங்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறப்பாக பணியாற்றும் காவலர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.