கோவையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!! தொழில் உற்பத்தி பாதிப்பால் தொழில்முனைவோர்கள் கவலை!!

கோவையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!! தொழில் உற்பத்தி பாதிப்பால் தொழில்முனைவோர்கள் கவலை!!

கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொழில்முனைவோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.

மேலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில், ஏற்கனவே ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

மேலும், தற்போது இருக்கும் தொழிலாளர்களும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால், அனைத்து தொழிலும் நலிவடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.