ஒரு சீட்டுக்கு முட்டிமோதும் ப.சிதம்பரம், கே.எஸ் அழகிரி : காங்கிரஸ் கட்சியில் தீராத கோஷ்டி தகராறு !!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பெற முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒரு சீட்டுக்கு முட்டிமோதும் ப.சிதம்பரம், கே.எஸ் அழகிரி : காங்கிரஸ் கட்சியில் தீராத கோஷ்டி தகராறு !!

இந்தியாவில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதில், தி.மு.க எம்.பிக்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம். பிக்களான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவும் நீண்ட இழுபறிக்கு பிறகு 2 வேட்பாளர்களின் விவரங்களை  வெளியிடடுள்ளது. இதனிடையே, வேட்பு மனு தாக்கலானது கடந்த 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்பு மனுக்கள் 31ஆம் தேதி தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அந்த ஒரு சீட்டை பெறுவதற்கு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கென இருவரும் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் தலைமையை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.