வேலை கேட்டு வந்த வடமாநில தொழிலாளியை அடித்தே கொன்ற  தனியார் நிறுவன ஊழியர்கள்... 4 பேர் அதிரடி கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வேலை கேட்டு வந்த வடமாநில தொழிலாளியை  தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை கேட்டு வந்த வடமாநில தொழிலாளியை அடித்தே கொன்ற   தனியார் நிறுவன ஊழியர்கள்... 4 பேர் அதிரடி கைது

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் பிஜிலி குமார் ஆகியோர் வேலை கேட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால் அங்கிருந்த மேலாளர் மற்றும் ஊழியர்கள், அவர்களை தென்மாவட்டங்களுக்கு செல்ல நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் திருப்பூரிலேயே வேலை கேட்டதால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி, ராஜபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி அருகே வீசியுள்ளனர்.

இதில் மயக்க நிலையில் இருந்த ராஜ்குமார் உயிரிழந்த நிலையில், பிஜிலி குமார் அவ்வழியாக சென்றவர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார்,  கொலைக்கு பயன்படுத்தி வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.