மின்சார வாகன ஓட்டிகளே உஷார்.. 17 மின்சார வாகனங்கள் டமார்.. எப்படி இது நடந்துச்சு தெரியுமா?.. சென்னையில் பரபரப்பு!!

சென்னை போரூரில் தீ விபத்தில் 17 மின்சார இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சார வாகன ஓட்டிகளே உஷார்.. 17 மின்சார வாகனங்கள் டமார்.. எப்படி இது நடந்துச்சு தெரியுமா?.. சென்னையில் பரபரப்பு!!

போரூரில் குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் மின்சார இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் வாகன விற்பனை நடைபெற்று வந்தது. மேலும் இவர்களிடம் ஏற்கனவே மின்சார இரு சக்கர வாகனம் வாங்கியவர்களும் சர்வீஸ் செய்வதற்காக கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், விற்பனை நிலையத்தில் இருந்த ஒரு மின்சார வாகனத்திற்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதி்ர்பாராத விதமாக பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சிக்கும் முன், தீ மளமளவென பரவியது. இதில், 5 புதிய மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் சர்வீசுக்காக வந்திருந்த 12 வாகனங்கள் என மொத்தம் 17 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. 

தகவலறிந்து வந்த  தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பேட்டரிகளால் இயங்கும்  மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்பனை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் இந்த வகை வாகனங்கள் அடிக்கடி தீப் பிடித்து உயிர்ச்சேதம் வரை கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.