திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்.. 26,27-ம் தேதிகளில் வேட்பு மனு பரிசீலனை..!

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்..!

திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல்.. 26,27-ம் தேதிகளில் வேட்பு மனு பரிசீலனை..!

வேட்பு மனு தாக்கல்:

திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் மீதான பரிசீலனை வருகிற செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன்  தெரிவித்துள்ளார். 

பல மாவட்ட நிர்வாகிகள் வேட்பு மனுதாக்கல்:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்  மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு  வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். 

26,27-களில் பரிசீலனை: 

இந்த வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீதான பரிசீலனை அடுத்த இரு தினங்கள் நடைபெறும் என நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தேர்தல் தேதி:

மேலும் தகுதியுள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.