வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 118 நாற்காலிகள் பறிமுதல்!!

வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 118 நாற்காலிகள் பறிமுதல்!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த 118 நாற்காலிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 16வது வார்டில் வாக்காளர்களுக்கு நாற்காலிகள் விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது.

இதன் அடிப்படையில் அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த வீடு ஒன்றில் ஏராளமான புத்தம் புதிய பிளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.