53 நாட்களில் 333 கிலோ கஞ்சா பறிமுதல்... குமரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை...

குமரி மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் 333 கிலோ கஞ்சா பறிமுதல்- 89 கஞ்சா வழக்குகள் பதிவு-கஞ்சா விற்ற 129 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள்.

53 நாட்களில் 333 கிலோ கஞ்சா பறிமுதல்... குமரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை...
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் கஞ்சா,குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு-மேலும் சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
 
தமிழ்நாட்டில் கஞ்சா,குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைப்பெற்று வந்த நிலையில் புதிதாக பதவியேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு போதை பொருட்களை முற்றிலும் அழிப்பதற்காக தீவிரமான நடவடிக்களை எடுத்து வரும் சூழ்நிலையில் குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை செய்து வருகிறது.
 
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கடந்த 53 நாட்களில் 333 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 89 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 129 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வறவேற்பு தெரிவித்துள்ளார்கள்.