மூட்டை மீட்டையாக கிடைத்த மலேசிய காயின்கள்! போலீஸ் விசாரணை!

வாகன சோதனையில், 25 மூட்டைகளில் மலேசியன் காயின்கள் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூட்டை மீட்டையாக கிடைத்த மலேசிய காயின்கள்! போலீஸ் விசாரணை!

சென்னை: எழும்பூர் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டும் இதுந்துள்ளனர். அப்போது பி.வி செழியன் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் சிறிய சிறிய மூட்டைகளாக 25 மூட்டைகள் மலேசிய காயின்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்த எழும்பூர் போலீசார் மலேசியன் காயின்களை கொண்டு வந்த செழியன் சாலையைச் சேர்ந்த ஆசிப் மற்றும் டாட்டா ஏஸ் வாகன ஓட்டுனரான பாபு ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 697 கிராம் தங்கம்..!

25 சிறிய சிறிய மூட்டையில் உள்ள மலேசிய காயின்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்றும், இவர்கள் யாருக்கு எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மலேசியன் நாணயங்களின் மதிப்புகள் எவ்வளவு என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எழும்பூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்ய வரவுள்ளனர்.

மேலும் படிக்க | வேனில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்!