முட்டை விலை 6 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் :  தமிழ்நாடு  கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் தகவல் !!

இனிவரும் காலங்களில் முட்டை விலை 6 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என்று தமிழ்நாடு  கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலை 6 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் :  தமிழ்நாடு  கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் தகவல் !!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் நேற்று 15 காசுகள் உயர்ந்து ரூ 5.35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே இது தான் உட்சபட்ச விலையாகும். இந்த விலை உயர்வு குறித்த தமிழ்நாடு கோழிப்பணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்குராஜ் கூறுகையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி கடந்த சில நாட்களாக குறைந்து விட்டது. மூலப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக கடந்த 4 மாதங்களில் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும்‌ மக்காச்சோளம், சோயா போன்றவற்றின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு 4 மாதங்களில் மட்டும் 2.50 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 5.30 ஆக உள்ளது.

இதன்காரணமாக பண்ணைகளில் புதிதாக கோழிகுஞ்சுகளை விடாமல் உள்ளது. அதேபோல் வயது‌ முதிர்ந்த கோழிகளையும் விற்பனை செய்யப்பட்டது. இதன்காரணமாக நாமக்கல் மண்டலத்தில் தற்போது 60 சதவீதம் மட்டுமே முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

சத்துணவு திட்டத்திற்கு டெண்டர் விடப்பட உள்ளதால் முட்டை விலை உயரத்தப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், சத்துணவு டெண்டர் விட இன்னும் 4 மாதங்கள் உள்ளது எனவும் சத்துணவு டெண்டருக்கும் முட்டை விலை உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.