கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் - ப. சிதம்பரம்

கல்வி சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளடங்கிய வளர்ச்சியைப் பெற முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் - ப. சிதம்பரம்

"காங்கிரஸ் எக்னாமிக் மாடல்" எனும் கருத்தரங்கம் அனைத்து இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு சார்பில் சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்றது. அதில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  அப்போது மேடையில் பேசிய ப.சிதம்பரம்,

31 வருடமாக இந்தியா  உலகளாவிய பொருளாதார கொள்கையை ஏற்று கொண்டுள்ளது. 1991லிருந்து இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது. அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பொருளாதர மாற்றங்கள் பற்றி பேச போகிறேன். 2004, 2014 லிருந்து 4 முறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மாற்றமடைந்துள்ளது. 7.5 % லிருந்து 9% என GDP அதிகரித்தது. 230 மில்லியன் மக்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். நமது 50% மக்கள் தொகையினர் 25 வயதுக்கும் கீழ் உள்ள இளைஞர்கள். பொருளாதார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த 31 வருடம் பொருளாதாரம் பற்றி பல அனுவங்ககளை கொடுத்துள்ளது. பிராந்தியங்களுக்கு இடையே வேறுபட்ட பொருளாதாரம் நிலவுகிறது.

திறன் மேம்படுத்துவதற்கு இந்திய ராணுவத்தை பயன்படுத்துகிறார்களா? ராணுவம் என்பது திறனை மேம்பாட்டு திட்டம் கிடையாது.  அக்னி வீரர்களாக வெளியே வருபவர்கள் முடி திருத்துவோர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்பவர்களாக மாறப் போகிறார்கள். எங்களுடைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பக்கோடா விற்பதையும், பஜ்ஜி போடுவதையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம்.

பசியால் வாடுபவர் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101 வது இடத்தில் உள்ளது. 8.72 லட்சம் இடங்கள் மத்திய அரசு பணிகள் காலியாக உள்ளது. 10 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக்கிய இலக்கு இது தான்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு செல்லவேண்டும். கல்விக்காக மாணவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பீகாரின் மருத்துவ கட்டமைப்பையும் கேரளாவின் கட்டப்மைப்பையும் ஒப்பிட முடியாது. *கல்வி சுகாதாரம் இரண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் உள்ளடங்கிய வளர்ச்சியைப் பெற முடியும். அதிகாரம் பரவலாக்க வேண்டும்

திறன் மேம்படுத்துவதற்கு இந்திய ராணுவத்தை பயன்படுத்துகிறார்களா? ராணுவம் என்பது திறனை மேம்பாட்டு திட்டம் கிடையாது.  அக்னி வீரர்களாக வெளியே வருபவர்கள் முடி திருத்துவோர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, துணி துவைப்பார்கள் மாற போகிறார்கள்.

சிறு குறு நிறுவனங்களுக்கு 30 லட்சம் கோடி கடன் வழங்கப்படுவதாக நிதி அமைச்சரால் கூறப்பட்டு 3 லட்சம் கோடி தான் கடன்கள் கொடுக்கப்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என நினைக்கிறேன். கல்வி கடனுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கு 10 ரூபாய் மட்டும் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் மாணவர்கள் எவ்வாறு கல்வி பெற முடியும். சிறு குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

தற்போது நடைமுறையிலிருக்கும் ஜிஎஸ்டி நாங்கள் திட்டமிட்ட ஜிஎஸ்டி வரி கிடையாது. அரவிந்த் சுப்பிரமணியன் பரிந்துரைத்த ஜிஎஸ்டி ஒரே ஒரு ஜிஎஸ்டி வரி திட்டம் தான். ஒரே அளவீட்டில் குறைந்த வரி வசூலிக்கப்படும் என்று தான் முதலில் திட்டம் தீட்டப்பட்டது. அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே குறைந்த தொகையில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கபடுவதாக தான் நாங்கள் உருவாக்கினோம்.

ஒரு காலத்தில் உங்கள் பெற்றோருடன் பேசவேண்டும் என்றால், நீங்கள் ஃபோன் அழைப்புகளை முன்பதிவு செய்யவேண்டிய நிலை இருந்தது.  ஆனால், அடுத்த 15 வருடங்களுக்குப் பிறகு உருவான தலைமுறையிடம் இதை சொன்னால் சிரிப்பார்கள். 30 வருடங்களில் நாம் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளோம். பலவற்றை மறந்துள்ளோம். ஆனால், வறுமை இன்னும் உள்ளது. 

நீங்கள் அரசு சொல்லும் எல்லாவற்றையும் நம்பினால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதிலும், தற்போதைய அரசாங்கம் மோசமானதாக உள்ளது.  2019இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 டிரில்லியன் பொருளாதாரம்  2022-ல் அடைவோம் என சொன்னார்கள். தற்போது அதை 2024-25க்கு மாற்றியிருக்கிறார்கள். 

மொத்த மக்கள் தொகையில் 42.13% சதவிகிதர்தினர் வேலையை தேடிக்கொண்டிருக்கின்றனர். இது கிட்டத்தட்ட 60 முதல் 70 கோடியாக உள்ளது. பெண்கள் 9.4%. உழைக்கக்கூடிய பெண்களில் 90 சதவிகிதத்தினர் வேலை தேடிக் கொண்டிருக்கின்றனர். இதில், பலர் வீட்டு வேலை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. இது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவை மாற்றுத்திறனாளி நாடாக உள்ளது.  இந்தியா வேகமாக வளரும் நாடாக உள்ளது என்கின்றனர். அது உண்மை தான். நாம் வேகமாக ஓடுவது குறித்து யோசிக்கும்போது, சீனா நீண்ட தூரம் ஓடுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 

கார், டூவீலர், சைக்கிள் இல்லாத இந்திய குடும்பங்களின் எண்ணிக்கை 25 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் 5 வயதைக் கடப்பதற்குள் ஆயிரத்தில் 30 முதல் 41 குழந்தைகள் உயிரிழக்கின்றன. குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற பசியில்லா சூழல் உருவாகவேண்டும். ஆனால், உலக ஹங்கர் ரேட்டிங்கில் இந்தியா 101ஆவது இடத்தில் உள்ளது.  நவ சங்கல்ப் எகனாமி மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள உழைக்கும் தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் வேலை உருவாக்கிக் கொடுக்கப்படும். 

இந்திய பாதுகாப்புப் படை, வங்கிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதை செய்யாமல் இருக்கிறது இந்த அரசு.  ஒரு சட்டக்கல்லூரிக்கு 50 ஏக்கர் எதற்கு. ஒரு சில மாடிகள் கட்டினாலே சுலபமாக மாணவர்களுக்கான வகுப்புகளை உருவாக்கமுடியும் எனும்போது, நூற்றுக்கணக்கான கோடிகளை செலவு செய்து எதற்காக சட்டக்கல்லூரிகள் கட்டவேண்டும்?

வேலை வாய்ப்பு உருவாக்குவது தான் காங்கிரஸின் முதல் கடமையாக இருக்கும். நான் இங்க்ஹ் உறுதியாக டொல்கிறேன், இன்று வேலை வாய்ப்பை கொடுப்போம் என சொல்லிவிட்டு, நாளை பக்கோடா விற்கும் வேலைக்குச் செல்லுங்கள் என மாற்றிப் பேசமாட்டோம். சுகாதாரம், கல்வி மட்டும் தான் எங்கள் முதல் முன்னுரிமையாக இருக்கும். உழைக்கும் உடல்நலனுடனும், அறிவாற்றலுடனும் இந்தியர்களை மாற்றுவதே எங்களது முக்கிய கடமையாக இருக்கும். நம்முடைய சிஸ்டத்திலுள்ள கோளாறுகளைத் தாண்டியும் நம் குழந்தைகள் சாதிக்கின்றனர். இந்தப் பிரச்சினைகளையும் களைந்துவிட்டால் அவர்களது சாதனை இந்த உலகத்தையே மாற்றும். 

மஷ்ரூம் பொறியியல் கல்லூரிகளில் படித்துவிட்டு வருபவர்களால் சூப்பர்வைசர்களாக மட்டுமே இருக்க முடிகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை சமமற்ற பொருளாதார நிலையை அகற்றுவதை மையமாகக் கொண்டிருக்கும். கொரோனா காலத்தில் 147 தனி மனிதர்கள் 30 லட்சம் கோடி சம்பாதித்திருக்கிறார்கள்.

டாப் 10 நிலைக்கு வந்தவர்களைவிட, அங்கிருந்து கீழே இறங்கியவர்களை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். தற்போதைய அரசாங்கத்திடம் எவ்வளவோ சொல்லியாகிவிட்டது. எவ்வளவு சொன்னாலும் அவர்கள் பிடித்த நிலையிலேயே இருக்கின்றனர். எனவே, அனைத்தையும் நாம் மாற்றவேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.