நீட் தேர்வு விலக்கு  தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும்: எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு  தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என்று  எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்திருக்கிறார்.

நீட் தேர்வு விலக்கு  தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும்: எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி

சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக விவாதம் நடந்தது.இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.  மேலும் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு  கொண்டு வரகப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தவறாக தகவலை கூறியதாக குறி்ப்பிட்டார்.

இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு விலக்கு பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும். விலக்கு பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். போராடுவோம்..வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார்.

இதை தொடர்ந்து பேசிய இ.பி எஸ், தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு  தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக நிச்சயம் துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.