வெள்ளை அறிக்கை எதிரொலி... கடனை செலுத்த வந்த இளைஞர்...

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் கடன் தொகையை செலுத்த வந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை அறிக்கை எதிரொலி... கடனை செலுத்த வந்த இளைஞர்...

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டார். அதில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், 2புள்ளி 63 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பாலபட்டியை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜன், ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொகையை வழங்க காசோலையுடன் வந்துள்ளார்.

இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் இடையே வியப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் வழங்கிய காசோலையை ஆட்சியர் வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பியுள்ளார்.