கனமழை எதிரொலி- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை  

கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை   

கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழையை முன்னிட்டு, கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருப்பினும், கடந்த 14-ம் தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழைநீர் நிரம்பி, எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.