ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்றா...!!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்றா...!!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் தீவிர பாதிப்பு என்பது யாருக்கும் இல்லை என தெரிவித்தார். 

மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், காற்று மாசு காரணமாக அவருக்கு லேசான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   உகாதி வாழ்த்து தெரிவித்த எம்.பி. பாரிவேந்தர்...!!