ஆளுநரை சந்திக்க ஈபிஎஸ் திடீர் முடிவு...!

ஆளுநரை சந்திக்க  ஈபிஎஸ் திடீர் முடிவு...!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற புதன் கிழமை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

சட்டம் – ஒழுங்கு சீர்கேடு:

கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு, எழும்பூர் காவல் நிலையம் முன்பு நடைபெற்ற படுகொலை போன்றவற்றை மேற்கோள்காட்டி தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி இரு தினங்களுக்கு முன்பு குற்றம்சாட்டி இருந்தார். மேலும், காவல் துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தி இருந்தார்.

இதையும் படிக்க: 2026-ல் பணிகள் நிறைவு குறித்த அறிக்கையை...தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு!

ஆளுநரை சந்திக்க உள்ள ஈபிஎஸ்:

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிச்சாமி புதன் கிழமை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, தமிழக சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த அறிக்கையை ஆளுநரிடம் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  வழங்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.