அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் -ஐ அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் ஆதரவாளர்  தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் -ஐ அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் ஆதரவாளர்  தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த புகழேந்தி மனு.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்ட தீர்மானங்களையும் அங்கீகரிக்க கூடாது என்றும் புகழேந்தி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

கர்னாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்குவதால் தன்னை அ.திமு.க  வின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் நேற்றைய தினம் இது தொடர்பான முடிவை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு 10-நாட்கள் கால அவகாசம் வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.
அ.தி.மு.க வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா அல்லது நிராகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அ.தி.மு.க ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் படிக்க | உறுப்பினர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி


 அந்த மனுவில் அ.தி.மு.க என்ற கட்சி தற்போதும் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமையின கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ் தான் உண்மையான அ.தி.மு.க என்றும் கர்னாடக தேர்தலில் ஓ.பி.எஸ் கையெழுத்திடும் வேட்பாளரின் வேட்பு மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி, தன்னிடம் தான் கட்சி உள்ளது என்று கர்னாடக தேர்தலை கருத்தில் கொண்டும் உடனே அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து  தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்த முயல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமில்லாமல் அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட  18 - வழக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால்  இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக முடிவெடுக்க கூடாது.

மேலும் படிக்க | 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை....!!

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ள மூல வழக்கே முடிவெடுக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணையை தேர்தல் ஆணையத்தில் சுட்டிக் காட்டி தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க வின் பொதுச் செயலாராக அங்கீகரிக்க கூடாது  என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி தெரிவித்தார்.