அதிமுக செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்க்கிறார் - உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மனு!

அதிமுக செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்க்கிறார் - உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மனு!

அதிமுகவின் ஒற்றைத்தலைமை பிரச்சனை குறித்து ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிமுக செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் அடுத்தடுத்து வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். அதன்படி உயர்நீதிமன்ற கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோன்று பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.  

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பில் இன்று கூடுதல் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால், ஓ.பி.எஸ் அவர்கள் நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியவில்லை, கட்சி செலவுக்கான தொகையை எடுக்க முடியாத நிலையை ஓ.பி.எஸ் ஏற்படுத்தியுள்ளார். தனக்கான செல்வாக்கு நம்பிக்கையை இழந்து விட்டதால் தான் பொதுக்குழுவுக்கு அவர் தடை கோருகிறார். அதிமுகவின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் ஓபிஎஸ் முடக்கப் பார்க்கிறார். ஓபிஎஸ் செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது.” இவ்வாறு மனுவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த மனுவுடன் சேர்த்து, ஒற்றைத்தலைமை கோரி இரண்டாயிரத்து 190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்த ஆவணங்களையும் இ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது.