மின் கட்டணம் செலுத்தணுமா? இந்த முறையை பின்பற்றுங்க. அவசரம் வேண்டாம்.. செந்தில் பாலாஜி விளக்கம்!!

மின் கட்டணம் செலுத்தணுமா? இந்த முறையை பின்பற்றுங்க. அவசரம் வேண்டாம்.. செந்தில் பாலாஜி விளக்கம்!!

மே மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த அவசரப்பட வேண்டாம் என கூறியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்கட்டணம் செலுத்துவது தொடர்பாக  விளக்கம் அளித்துள்ளார். 

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் மாதத்திற்கு இரு முறை வசூலிக்கப்படும் மின்கட்டணம் இந்த மே மாதம் செலுத்த வேண்டி உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக மின் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று யூனிட் கணக்கிட்டு, பின்னர் வாடிக்கையாளர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்துறை சார்பிலும் மக்களும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.  

கோடைக் காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மின்சாரம், அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 23ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். 

அதன்பின்னர் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும் மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாகப் புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ் அப் 24 மணி எண்ணும் அறிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாது மே மாதத்துக்கான மின் கட்டணத்தைப் பொதுமக்களே சுயமாகக் கணக்கீடு செய்து கொள்ளலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி மின்மீட்டரில் உள்ள யூனிட்டை புகைப்படம் எடுத்து மக்கள், வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் வாயிலாக மின்வாரிய உதவிப் பொறியாளரின் கைபேசி, இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். அந்தந்த மின்வாரிய உதவிப் பொறியாளர்களின் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியன www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன எனவும் மின்வாரியம் தெரிவித்திருந்தது. 

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, மக்கள் தங்களது வீடுகளில் உள்ள மின்மீட்டர் யூனிட்டை புகைப்படம் எடுத்து, ஏற்கனவே ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில்(94458-50811) அனுப்பலாம் அல்லது அந்த புகைப்படத்துடன் நேரில் சென்று மின்கட்டணத்தை செலுத்தலாம். இதில் அவரசம் வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.