காலமானார் துர்க்கா ஸ்டாலினின் சகோதரி... முதலமைச்சர் அஞ்சலி....

காலமானார் துர்க்கா ஸ்டாலினின் சகோதரி... முதலமைச்சர் அஞ்சலி....

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவர்களின் தங்கை சாருமதி சண்முகசுந்தரம், நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 

உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவருடன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் எழும்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் தியாகராயநகரில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யவுள்ளனர்.

இதையும் படிக்க:  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்.... மயிலாப்பூரில் கைது.....