குடிபோதையில் விபரீதம் : காவல்துறையினர் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி - கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை ...

தாம்பரம் அருகே காவல்துறையினர் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி, கொத்தனார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் விபரீதம் : காவல்துறையினர் அவமானப்படுத்தி விட்டதாகக் கூறி - கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை ...

சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் மகேஷ்வரி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். கொத்தனாரான அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவும் அதேபோல் நடந்து கொள்ள, அவரது மனைவி பாண்டியம்மாள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஆனந்தனை கண்டித்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த ஆனந்தன், போலீசார் அவமானப்படுத்தி விட்டதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

போலீசார் எச்சரித்துவிட்டுச் சென்ற நிலையில், இரவு அனைவரும் தூங்கிய பிறகு, ஆனந்தன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.