தூத்துக்குடியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்..! - எம்.பி. கனிமொழி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்..! -  எம்.பி. கனிமொழி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தூத்துக்குடி  ஹெர்குலேனியம் எலைட் இணைந்து ' போதைப் பொருள் எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் ' என்ற தலைப்பில் நம்ம தூத்துக்குடியின் பெருநடை என்ற பெயரில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.  Helpline For Drug Addiction India, HD Png Download , Transparent Png Image  - PNGitem

இப்போட்டியை, தூத்துக்குடி எம்பி கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து இதில் கலந்துகொண்ட 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இலக்கை நோக்கி சென்றனர். 21 கிலோமீட்டர் தூரம் மற்றும் 10 கிலோமீட்டர் தூரம் ஆகிய ஐந்து கிலோமீட்டர் தூரம் என மூன்று நிலைகளில்  ஆண்கள் பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியின் முடிவில்,  21 கிலோமீட்டர் தூரத்தில் முதலாவதாக கென்யா நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் முதலிடம் பிடித்தார் (25ஆயிரம் பணம்). 

மேலும், இரண்டாவது, மூன்றாவது இடங்களை அணில் குமரா (15ஆயிரம்)  மற்றும் ரமேஷ்வர் (10ஆயிரம்) ஆகியோர்  முறையே வெற்றி பெற்றனர். இந்த மினி மரத்தான் போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கென்யாவிலிருந்தும் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த போட்டியில் பதிவு செய்த  அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், சான்றிதழ், கிட்பேக் மற்றும் கூல்டிரிங்ஸ் வழங்கப்பட்டன.

 இதையும் படிக்க      ]  மதுரை எய்ம்ஸ் முன்னாள் தலைவரின் நினைவுதினம்...மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்!