வாகன ஓட்டிகளே உஷார்.. பின் இருக்கைவாசிகள் தலைக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம்!!

சென்னையில் இருசக்கர வாகன பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபர்கள் மீது அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதை  கூடுதல் ஆணையர் கபில் சாரட்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வாகன ஓட்டிகளே உஷார்.. பின் இருக்கைவாசிகள் தலைக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம்!!

போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட தணிக்கையில் அதிகபடியான விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாததாலேயே நடப்பது கண்டறியப்பட்டது.

அதிலும் பின் இருக்கை பயணிகள் அதிகம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது.இதையடுத்து சென்னையில் இன்றுமுதல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற நடைமுறையை காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில்  தலைக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் முறையை கூடுதல் ஆணையர் கபில் சாரட்கர் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களது லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றார்.

அபராதம் வசூலிக்கும் போது வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்காணிப்பதற்காக 300க்கும் மேற்பட்ட பாடி வோர்ன் கேமரா போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை மீறி வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.