சங்கராபுரம் அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி...

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இடிந்துவிழும் நிலையில் அபாயகரமான குடிநீர் தொட்டி இருப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கராபுரம் அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது விரியூர் கிராமம் இந்த கிராமத்தில்  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ளது.

இதற்கிடையில் இந்த தொட்டியின் நான்கு தூண்களிலும் கட்டுமான கம்பிகள் பெயர்ந்து வெளியே தெரியும் வண்ணம் உள்ளன. இந்த தொட்டியானது எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதன் அருகில் செல்ல பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர்.

ஆகையால் இந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு,புதிய குடிநீர் தொட்டி அமைத்து இந்த பகுதி மக்களின் தாகத்தை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.