அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்துள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்துள்ளது.

அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்துள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அவைகளின் விலையை உயர்த்தி வருகின்றன. அதன்படி பல பெருநகரங்களில் பெட்ரோல் விலை 100 ருபாயை கடந்துள்ளது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.20 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து 99 ரூபாய் 8 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து 93 ரூபாய் 38 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.