சாதாரண கட்டண பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வசூல்படி இரட்டிப்பு - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

சாதாரண கட்டண பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

சாதாரண கட்டண பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வசூல்படி இரட்டிப்பு - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 12ந் தேதி நடைபெற்றது.

அப்போது, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி நிர்ணயம் செய்ய வேண்டுமென்று போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையிலும், முதலமைச்சரின் அறிவுரையின் பேரிலும், சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில்  ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.