3 மாதம் சம்பளம் இல்லை...மருத்துவர்கள் வருத்தம்!

கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் மூன்று மாதமாக சம்பளம் கொடுக்காததால் மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் ஜூன் 15 அன்று 1,000 படுக்கைகள் கொண்ட வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனிடையே ஜூன் 13ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் மூலம் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள், மறுநாள் பணியில் சேருமாறு அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களும் அடங்குவர்.

இதையும் படிக்க : பெண்களுக்கு வழங்கப்படுவது வெறும் டெபிட் கார்டு அல்ல; வாழ்க்கையை மாற்றக்கூடிய துருப்புச் சீட்டு!

சில மருத்துவர்கள் சம்பளம் வழங்குவதில் தாமதத்தை எதிர்பார்த்த நிலையில், மூன்று மாதங்கள் ஆகியும் சம்பளம் வருவதற்கான அறிகுறியே இல்லை. “எங்களுக்கு வீட்டு வாடகை, கடன்களுக்கான தவணை, மருத்துவம், வீட்டு செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகியவை உள்ளது. சம்பளம் இல்லாமல் நாங்கள் எப்படி சமாளிக்க முடியும்?” சம்பளம் வழங்குவது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் நாங்கள் விசாரிக்கும் போதெல்லாம், அவர்கள் எங்களுக்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள், இது மேலும் தாமதமாகும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.