ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் உள்ளதா?

ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்கள் உள்ளதா?

ரேஷன் கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வரவு விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ரேஷன் கடைகளில் நடத்தப்படும் ஆய்வின்போது பாமாயில், டீ தூள் போன்ற பொருட்கள் காலாவதியான பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து  அப்படி இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மேலும் காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.