கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா..?

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது மரபணு ஆய்வுக்கு பின்னரே அறியப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா..?

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழகத்தில்அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கிங்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்,  தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.