மெட்ராஸ் ஐக்கு கண் மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?

மெட்ராஸ் ஐக்கு கண் மருத்துவ நிபுணர்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?

அதிகரித்து வரும் மெட்ராஸ் ஐ கண் பாதிப்புக்கு  சுய மருத்துவம் வேண்டாமென்று கண் மருத்துவ நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .மருத்துவர் ஆலோசனையின்றி  ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தினால் போரபத்தை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.  

மெட்ராஸ் ஐ - சுய மருத்துவம் வேண்டாம் நிபுணர்கள் வேண்டுகோள்:

மெட்ராஸ் ஐ என பெயர் கொண்ட கண் அழற்சி பாதிப்பு சென்னையில் மட்டும் பரவுவதில்லை எல்லா இடங்களில் பரவ கூடியது. பருவநிலை மாற்றம் காரணமாக பரவும்  மெட்ராஸ் ஐ நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் அழையா விருந்தாளியாக முகம் காட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் வந்துட்டான்னு சொல்லு என்று கூறி சென்னை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது மெட்ராஸ் ஐ.

சென்னையில் மட்டும் மெட்ராஸ் ஐ யால் தினமும்  80 முதல் 100 பேர் பாதிக்கப்படுவதாக கூறும் மருத்துவர்கள்,  ஒரு சிலருக்கு 10 நாட்கள் வரை அதன் பாதிப்பு நீடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர் .

இதையும் படிக்க: இனி எப்போதும் அதிமுக அதை பெற முடியாது... கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

மெட்ராஸ் ஐ பாகுபாடின்றி அனைவரையும் தாக்கும் இதற்கு,  குழந்தைகள் மட்டும் விதிவிலக்கல்ல என கூறுகின்றனர் மருத்துவர்கள். பார்த்தால் பரவுவது மெட்ராஸ் ஐ அல்ல. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை தொட்டால் பரவும் என்கின்றனர். பரவுவதில்  மெட்ராஸ் ஐயும், கொரனோவும்  ஒரே மாதிரி தான் என்றும் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். மெட்ராஸ் ஐ கண் பாதிப்புக்கு  சுய மருத்துவம் வேண்டாமென்று  கூறும் கண் மருத்துவ நிபுணர்கள், ஆலோசனையின்றி ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தினால் பேராபத்தை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

மெட்ராஸ் ஐ என்பது மிக வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்றாகும், பொதுமக்கள் யாரும் இதைக் கண்டு அச்சப்பட தேவையில்லை என்பது மருத்துவர்களின் அறிவுரை. கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனபது டாக்டரின் அட்வைஸ். மற்றப்படி 3 அல்லது நான்கு நாட்கள் தான் மெட்ராஸ் ஐ தாக்கம் இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.