இளையராஜா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. நானும் கருப்பு திராவிடன் தான் - அண்ணாமலை

இளையராஜா விவகாரத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் தானும் கருப்பு திராவிடன் தான் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இளையராஜா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்.. நானும் கருப்பு திராவிடன் தான் - அண்ணாமலை

சென்னை காரம்பாக்கத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

புத்தக முன்னுரை தொடர்பாக அம்பேத்கரை வைத்து அரசியல் செய்ய கூடிய கட்சிகள் இளையராஜாவைப் பற்றிய பதிவுகள் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவித்தார். இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் உள்ளதாகவும்  பாஜகவிற்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

சமூக நீதி பற்றிப் பேசும் திமுகவினரே தரக்குறைவாக விமர்சிப்பதைப் பார்த்து, அவர்கள் கடைப்பிடிப்பது போலி சமூக நீதி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் நியமிக்கும் எம்பி பதவிக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அதற்கும் மேலாக இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே தங்களது வேண்டுகோள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.