கார் பார்க்கிங் செய்வதில் தகராறு.. ஆணும், பெண்ணும் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் பரபரப்பு காட்சி!!

சென்னை அடுத்த மாங்காடு அருகே கார் பார்க்கிங் தகராறில் ஆணும், பெண்ணும் தலைமுடியை பிடித்து இழுத்தும், எட்டி உதைத்து தாக்கிக் கொள்ளும்  காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

கார் பார்க்கிங் செய்வதில் தகராறு.. ஆணும், பெண்ணும் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் பரபரப்பு காட்சி!!

சென்னை அடுத்த மாங்காடு பத்மாவதி நகர் 1-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் வீட்டில் மோகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதே குடியிருப்பின் மேல்வீட்டில் நித்யா என்பவர் தனியாக வசித்து வருகிறார்.

இருவருக்கும் தனித்தனியே கார் பார்க்கிங் இடம் இருக்கும் நிலையில், வேறு ஒரு நபர் மோகன் அனுமதியுடன் பைக்கை பார்க்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நித்யா- மோகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்  ஒருவர்மீது ஒருவர் காலணியை வீசி தாக்கிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மோகன்,படிக்கட்டில் ஏறி சென்று நித்யாவின் தலைமுடியை பிடித்து தரதரவென கீழே இழுத்து வந்து தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாங்காடு காவல்துறையினர் இருவரிடம் சமரச பேச்சு நடத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.