வேலையை விட்டு நீக்கியதால் - அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி!

வேலையை விட்டு நீக்கியதால் - அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி!

சென்னை மாதவரத்தில் வேலை இழந்த காரணத்தினால் அதிகாரி மீது பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சித்த துப்புரவு பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

எழும்பூரை சேர்ந்த அசோக்குமார் மாதவரத்தில் ஒப்பந்த தொழிலாளராக துப்புரவு பணி செய்து வந்தார். இந்நிலையில் அவர் தினமும் குடித்துவிட்டு வேலை செய்யாமல் தூங்கிவிடுவதால் மேலாளர் பாஸ்கரன் அவரை வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர், மேளாலர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்த முயற்சி செய்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மேளாலரை மீட்டு சென்றனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.