மேயர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல்... திருமாவளவன் கோரிக்கை...

உள்ளாட்சி தேர்தலில் மேயர் மற்றும் மாவட்ட தலைவர் பதவிகளுக்கு நேரடியாக  தேர்தல் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேயர் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல்... திருமாவளவன் கோரிக்கை...

சென்னை  அண்ணா அறிவாலயத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னர் இதனை தெரிவித்தார்.

மேலும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெயர் மாற்றியது அநாகரிகமானது என்றும்  ராஜிவ் காந்தி பெயரிலேயே தொடர்ந்து விருது வழங்கப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில்  தமிழக பாஜகவினர் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டிய திருமாவளவன், ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியில் தலித் சமூகத்தை வந்தானாவின் இல்லம் முன் நடத்தப்பட்ட சம்பவம் விளையாட்டிலும் சாதி அரசியல் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும்  உலக அரங்கில் இது இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவம் வேதனை தெரிவித்தார்.