சம்பா, நெல் அறுவடை பணியில் தோய்வு - விவசாயிகள் கவலை!

சம்பா, நெல் அறுவடை பணியில் தோய்வு - விவசாயிகள் கவலை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு :

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு, மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சம்பா பயிர் அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியடைந்தனர்.

இதையும் படிக்க : அவர் ஒரு கம்யூனிஸ்ட்...அவருக்கு பயமே இல்லையாம்...!

நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நடைபெற்று வரும், சம்பா நெல் அறுவடை பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.