தேர்தல் ஆணையத்தின் முடிவால் தர்மம் வென்றுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

தேர்தல் ஆணையத்தின் முடிவால் தர்மம் வென்றுள்ளது - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை எனவும், தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கு தொடர்ந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வானதை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப் பின் பரபரப்புகளுக்கு மத்தியில், இவ்வழக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க : விரைவில் டிஎன் பிஎஸ்சி தலைவராகும் சைலேந்திரபாபு?

தொடர்ந்து இவ்வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் 10 நாட்களில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலக்கெடு நாளையுடன் நிறைவடையும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக இ பிஎஸ்-ஐ அங்கீகரிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவை ஏற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப் பினை வரவேற்று, தலைமைச் செயலகத்தில் இ. பி.எஸ்-ஐ சந்தித்து, இனிப்புகள் வழங்கி சட்டமன்ற அதிமுக உறுப் பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் முடிவின் மூலம் தர்மம் வென்றுள்ளதாக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அதேபோல், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு அதிமுகவினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தெரிவித்தது குறிப் பிடத்தக்கது.