தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

விடுமுறை நாளையொட்டி தமிழக கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழக கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

முருகப் பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் தீர்த்தக்காவடி எடுத்தும் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

படிப்பாதை, மின்இழுவை ரயில் மற்றும் ரோப் கார் ஆகியவை மூலம் மலைக்கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர். முடி காணிக்கை செலுத்தும் இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமான திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.