சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி... 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை செல்லலாம்....

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி... 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை செல்லலாம்....

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவில் தரைமட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமிக்கு 4  நாட்கள் அமாவாசைக்கு 4 நாட்கள் என மாததிற்க்கு 8 நாட்கள் மட்டும் மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த காலங்களில் நோய்தோற்று பரவல் காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் தற்போது அரசு தமிழக முழுவதும் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு சென்று பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கிய நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வரும் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பக்தர்கள் முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி வானம் மேகமூட்டம் மற்றும் மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.