பட்டியலின மக்களுக்காக கடைசி வரை போராடியவர் - டி.ஆர்.பாலு புகழாரம்!

பட்டியலின மக்களுக்காக கடைசி வரை போராடியவர் - டி.ஆர்.பாலு புகழாரம்!
Published on: 
Updated on: 
1 min read

முத்துராமலிங்க தேவர் பட்டியலின மக்களுக்காக போராடியவர் என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு புகழாரம் சூட்டியுள்ளார். 

115வது தேவர் ஜெயந்தி:

முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேவரின் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  

முத்துராமலிங்க தேவருக்கு புகழாரம் சூட்டிய டி.ஆர்.பாலு:

இதேபோல் சென்னை மேயர் பிரியா ராஜன், டி.கே. எஸ் இளங்கோவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் சிலைக்கு  மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, பட்டியலின மக்களுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஆலய பிரவேசம் செய்த முத்துராமலிங்க தேவர், அவர்களுக்காக கடைசி வரை போராடியவர் என புகழாரம் சூட்டினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com