ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய அக்னி தீர்த்த கடற்கரை...

ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் இன்றி  வெறிச்சோடிய அக்னி தீர்த்த கடற்கரை, பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார்.

ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய அக்னி தீர்த்த கடற்கரை...

உலக பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம்  ராமநாதசுவாமி  திருக்கோவிலில் கொரோனா  பரவல் தடுக்கும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கோவில்கள் நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறக்கப்பட்ட தோடு அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் புனித நீராடவதற்கு  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆடி அமாவாசை நாளான இன்று வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வர கூடும் என்பதற்காக பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுப்பதற்காக ஆண்டுதோறும் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

ஆனால் இன்று மாவட்ட நிர்வாகத்தின் தடை காரணமாகவும் அக்னி தீர்த்த கடற்கரைக்கு வரக்கூடிய வழித்தடங்களை தகரத்தால் அடக்கப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு ஈடுபட்ட தின் காரணமாக அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.