வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால், அது அடுத்த 3 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் 21 ஆம் தேதி தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 22 ஆம் தேதி இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,  கடலூர்,  விழுப்புரம், செங்கல்பட்டிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படிக்க : டி.பி.ஐ.வளாகத்தில் அமைச்சர்கள் ஆய்வு...!