ஆளுநர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

ஆளுநர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆளுநர் நேற்று வந்தார். மாலை கொடைக்கானல் ஏரிச்சாலை அப்பர்லேக் சாலை ஆகியவற்றில் காரின் மூலம் சென்று இயற்கை எழிலை கண்டு ரசித்தார். 

இன்று  காலை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு சென்று அங்குள்ள ரோஜா பூக்களை ரசித்தார். ரோஜா பூங்கா 10 ஏக்கர் பரப்பளவு உள்ளதால் பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றி பார்த்தார். அங்குள்ள பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

இதை அடுத்து ரோஜா பூங்கா அருகே உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று அங்கு வானியல் ஆராய்ச்சிகள் பற்றி விஞ்ஞானிகள் இடம் கேட்டு அறிந்தார்.  அப்சர் வேட்டரி பகுதியில் ஆளுநர் சுமார் இரண்டு மணி நேரம் இருந்தார். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல வேண்டிய சுற்றுலா பயணிகள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. . 

மே 14-ல் ஆளுநர் கொடைக்கானல் வருகை | Governor RN Ravi visited Kodaikanal on  May 14 - hindutamil.in

இதை அடுத்து மீண்டும் கோஹினூர் மாளிகை திரும்பி அங்கிருந்து சுமார் 12 மணி அளவில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ரவி சென்றார் .அங்கு அவருக்கு கொடைக்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து அரைவட்ட ஆட்டு நடனம் ஆடி வரவேற்றனர் .

பின்னர் அந்த ஆதிவாசி பெண்களுடன் ஆளுநர் ரவி சிறிது நேரம் பேசினார். ஆதிவாசி மக்களிடம் அவர்களது குழந்தைகளின் பள்ளிக்கல்வி, உயர் கல்வி பற்றி கேட்டறிந்தார். ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வனச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டும் என்றும் , புலையன் இனத்திற்கு ஆதிவாசி சான்று வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர். 

இதையும் படிக்க     } கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் .யார்..? டெல்லிக்கு விரைந்த அமைச்சர்கள்..!

இதன் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தஅன்னை தெரசா திருவுருவ தொழிற்சாலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார் .இதை அடுத்து காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தார் .சுமார் ஒரு மணி அளவில் பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  மேலும்  கலந்துரையாடல்  நிகழ்ச்சிக்கு  செய்தியாளர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டது.

இதையும் படிக்க     } 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...வெளியாகும் தேதியில் அதிரடி மாற்றம்!