மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கிளம்பும் சர்ச்சை!

ஆம்பூரில் நடைபெறும் அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்படாவிட்டால், வளாகத்தின் வெளியில் வைத்துவழங்குவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் கூட்டமைப்பு மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கிளம்பும் சர்ச்சை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், அரசு சார்பில் வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. இதில், கோழி மற்றும் ஆட்டு பிரியாணி மட்டுமே அனுமதிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து, பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியையும் அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. குறிப்பாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்கபடாவிட்டால், திருவிழா நடக்கும் இடத்திற்கு வெளியே வழங்குவோம் என விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட தலித் கூட்டமைப்புகள், எஸ்டிபிஐ கட்சி மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு கட்சிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், 30 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர், SDPI கட்சியினர், தலித் கூட்டமைப்பினர், மனித நேய மக்கள் கட்சியினர் ஆம்பூரில் உள்ள மாட்டிறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.