பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு நிதியை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டில்  100 நாள் வேலைக்கு நிதியை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தலையில் இருப்புச்சட்டி, மண்வெட்டியுடன் கம்யூனிஸ்ட் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதியை குறைத்த ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும்..அதிக நிதி வழங்கிட கேட்டும்..ஆண்டுக்கு 100 நாள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்.. இதுவரை வேலை செய்ததற்கு உரிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அன்னவாசலில் ச்சங்கத்தினர் கையில் மண்வெட்டியும்
தலையில் மண் சுமக்கும் இருப்புச்சட்டியை சுமந்து கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் படிக்க | தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தினர் கையில் மண்வெட்டி, தலையில் மண் சுமக்கும் இருப்பு சட்டியை வைத்துக் கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மேலும் படிக்க | பாஜக தலைவரை ஒன்னாம் நம்பர் 420 - திமுக அமைச்சர்