சென்னையில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா: என்ன சொல்கிறது சுகாதாரத்துறை?

சென்னையில் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் குணமடைந்து விட்டதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கவியரசு கண்ணதாசனின் 95ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது உண்மை தான் என்றும், செவிலியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது  நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் வீரியமிக்கது என்றாலும் தொடர் சிகிச்சை அளித்து அதனை குணப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.  எனவே  பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட அவசியமில்லை என விளக்கமளித்தார்.  இந்நிலையில்  ஏற்கனவே வெளிநாட்டு விமானங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவை தொடங்கினாலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.