தமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று உறுதி…

தமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டில் 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று உறுதி…

இந்நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை எடுக்கப்பட்ட #SARS_CoV_2 வைரஸின் 554 மாதிரிகளின் முழு மரபணு சோதனையில் டெல்டா வைரஸின் மாறுபாடு மாதிரி, தமிழகத்தில் பாதித்தவர்களிடத்தில் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.குறிப்பாக இதில் முதற்கட்டமாக 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.