குறைந்து வரும் கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 26.16 லட்சமாக அதிகரிப்பு...

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்து வரும் கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 26.16 லட்சமாக அதிகரிப்பு...

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து நாள்தோறும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் ஆயிரத் 562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஆயிரத்து 684 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  34 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய  1 லட்சத்து 54 ஆயிரத்து 718 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 478 ஆக குறைந்துள்ளது.  மேலும், சென்னையில் புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.