குறைந்து வரும் கொரோனா பலி! தடுப்பூசி காரணமா?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மூன்றாவது நாளாக ஐந்தாயிரத்திற்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

குறைந்து வரும் கொரோனா பலி! தடுப்பூசி காரணமா?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மூன்றாவது நாளாக ஐந்தாயிரத்திற்கு கீழ் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 506 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து, 38 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தொற்று காரணமாக மொத்தம் 32 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 5 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 514 பேருக்கும், ஈரோட்டில் 420 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொறுத்தவரை 257 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.