திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழா...! சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு...!

திருவண்ணாமலை : கார்த்திகை தீபத்திருவிழா...! சிறப்பு பேருந்துகள் இயக்க  முடிவு...!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. 

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. இந்த பெருவிழாவை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.  

அப்படி திருவண்ணாமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 7ம் தேதி பொளர்ணமியும் உள்ளதால் சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்படுள்ளது. பொதுமக்களின் வருகையை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : மாணவி ஸ்ரீமதி தற்கொலை விவகாரம் !!! டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்...