இந்தியாவை முதன்மை நாடாக்கிட சபதம் எடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

இன்று இந்திய அரசமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்ட தினம்

இந்தியாவை முதன்மை நாடாக்கிட சபதம் எடுப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

உல க நாடு களில் இந்தியாவை முதன்மை நாடா க் கிட சபதம் எடுப்போம் என, இந்திய அரசமைப்பு சட்ட நாளையொட்டி முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பா க அவர் வெளியிட்டுள்ள அறி க் கையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் ஏற்று க் கொண்ட நாளான இன்று ம க் கள் அனைவரு க் கும் நெஞ்சார்ந்த வாழ்த்து க் களை தெரிவித்து கொள்வதா கூறியுள்ளார்.

1949-ம் ஆண்டு இதே நாளில் நம்மால் ஏற்று க் கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் நம் உரிமை களையும், கடமை களையும் உள்ளட க் கியிருப்பதோடு மட்டுமின்றி, நம் ஜனநாய கத்தின் அனைத்து க் கட்டமைப்பு களையும் கட்டி க் காத்து வருவதா குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்,

எத்தனையோ அரசமைப்பு சட்டங் கள் உல களவில் இருந்தாலும், எழுத்துப்பூர்வமான நம் சட்டம் உல கப் பு கழ் பெற்றது என்றும், அப்படியொரு அரசமைப்பு சட்டத்தை தந்த டா க்டர் அம்பேத் கரு க் கு நாம் என்றென்றும் நன்றி க் கடன் பட்டவர் கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றளவும் இந்தியாவை கட்டி ஆளும் இந்த அரசமைப்பு சட்டம்தான், மாநிலத்தில் அன்னை தமிழு க் கு ஆட்சி மொழி உரிமையை அளித்திருப்பதா க சுட்டி க் காட்டியுள்ள அவர், நம் அரசியல் சட்டம் கண்ட இந்தியாவை உல க நாடு களில் முதன்மை நாடா க் கிட சபதம் எடுப்போம் என சூளுரைத்துள்ளார்.